Home புதினங்களின் சங்கமம் அம்பாறையில் 11 வயது பிக்குவை துஸ்பிரயோகம் செய்த விகாரை தலைமைப் பிக்குவுக்கு 14 வருட கடூழிய...

அம்பாறையில் 11 வயது பிக்குவை துஸ்பிரயோகம் செய்த விகாரை தலைமைப் பிக்குவுக்கு 14 வருட கடூழிய சிறை!

அம்பாறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் 11 வயதுடைய இளம் பிக்கு ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி குற்றவாளியான தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதிகளான பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அம்பாறை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் தலையிடுவதற்குப் போதுமான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தேரரின் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தினர்.
குறித்த இளம் பிக்கு தொடர்பாகத் தேரருக்கு இருந்த அதிகாரம் மற்றும் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்தே இந்தக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குற்றம் இடம்பெற்றபோது பாதிக்கப்பட்ட இளம் பிக்குவுக்கு 11 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் தேரரைக் குற்றவாளியாகக் கண்ட அம்பாறை மேல் நீதிமன்றம், அவருக்கு 14 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், 40,000 ரூபா அபராதமும் விதித்திருந்தது.
மேலும், பாதிக்கப்பட்ட இளம் பிக்குவுக்கு 500,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments