Home புதினங்களின் சங்கமம் யாழில் தன்னை பொலிசார் பிடிக்க வருவதை அறிந்த காவாலி தன்னுடையதை அறுத்தான்! தற்போது 24ம் நம்பர்...

யாழில் தன்னை பொலிசார் பிடிக்க வருவதை அறிந்த காவாலி தன்னுடையதை அறுத்தான்! தற்போது 24ம் நம்பர் விடுதியில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸாரை கண்டதும் தனது கழுத்தை தானே அறுத்து தப்பிக்க முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை அழைத்துவர நேற்று பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது பொலிஸாரை கண்ட அந்த இளைஞர், வீட்டின் ஜன்னலை உடைத்து அந்த கண்ணாடி துண்டின் மூலம் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் உடனடியாக மீட்கப்பட்ட மேற்படி இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கழுத்தை அறுக்க முயன்றபோதும் அவருக்குப் பாரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படாத காரணத்தால், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments