Home புதினங்களின் சங்கமம் 16 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான தங்கத்துடன் தலைமன்னார் கடற்பரப்பில் பிடிபட்டவர்கள் யார்?

16 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான தங்கத்துடன் தலைமன்னார் கடற்பரப்பில் பிடிபட்டவர்கள் யார்?

இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்புகளுக்கு அருகில் நேற்று (17) முன்னெடுக்கப்பட்ட இருவேறு விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்துடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, தங்கத்தைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கி ரகப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த தங்கம் கடல் மார்க்கமாக தென்னிந்தியாவுக்குக் கடத்தப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

வடமத்திய கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, படகிலிருந்த மணல் சாக்குக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோகிராம் 410 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர், டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் நேற்று இரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அப்பகுதியில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டதில், அதன் எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடைய இருவர் டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments