இலங்கையின் கேகாலை, ஹிரிவடுன்ன, ஹல்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
39 வயதுடைய பிரசன்ன தர்மரத்ன மற்றும் 43 வயதுடைய ஜயந்த குமார ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தம்பி எதிர்பாராத விதமாகப் பலத்த காயங்களுடன் வீட்டின் வாசலில் சுயநினைவின்றிக் கிடந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தம்பியின் மரணச் செய்தியைக் கேட்ட மூத்த சகோதரர் ஜயந்த குமார, அந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் தாங்க முடியாமல் தனது உயிரையும் மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் இறுதிக்கிரியைகளும் அவர்கள் வசித்து வந்த மா ஓயா ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காணியில் இடம்பெற்றுள்ளன.




