Home புதினங்களின் சங்கமம் யாழில் பருப்பு வடைக்குள் கம்பிச் சுருள்! உணவக உரிமையாளருக்கு கடூழிய சிறை!

யாழில் பருப்பு வடைக்குள் கம்பிச் சுருள்! உணவக உரிமையாளருக்கு கடூழிய சிறை!

வடைக்குள் பாத்திரம் கழுவும் கம்பி சுருள்;
உணவு தயாரிப்பு நிலைய உரிமையாளரிற்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டணை!
-பருத்தித்துறை நீதிமன்றம் அதிரடி!

பருப்பு வடைக்குள் பாத்திரங்கள் கழுவுவதற்கு பயன்படுத்தும் கம்பி சுருள் காணப்பட்டமை தொடர்பில் குறித்த உணவு தயாரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவு வழங்கும் சேவைத்தாபனம் ஒன்றில் நுகர்வோரிற்கு மனித நுகர்விற்கு ஊறுவிளைவிக்ககூடியதான வகையில் Steel Whool கம்பித்துண்டுடன் கூடிய பருப்பு வடையானது விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான பொது முறைப்பாட்டினை பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஷிற்கு தெரியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அது தொடர்பாக அவரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து குறித்த உணவு வழங்கும் சேவைத்தாபன உரிமையாளரிற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்றையதினம் (2026.11.13) பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் இந்துஜா சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தண்டப்பணமாக 10,000 ரூபா விதிக்கப்பட்டதுடன் ஐந்து வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டணையும் விதிக்கப்பட்டது.

இவ் ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருடங்களுக்குள் மீண்டும் இவ்வாறு உணவு தயாரிப்பின் போது தவறுகள் கண்டறியப்படும் பட்சத்தில் குறித்த உரிமையாளர் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments