Home புதினங்களின் சங்கமம் யாழில் அப்பாவையும் மகனையும் நிறை வெறியில் மோதி கொன்ற பின் தப்பி ஓடிய வாகன சாரதி!...

யாழில் அப்பாவையும் மகனையும் நிறை வெறியில் மோதி கொன்ற பின் தப்பி ஓடிய வாகன சாரதி! வாகனத்தில் இருந்த அனைவருக்கும் போதை! பொலிஸ் நிலையம் முன் திரண்டு மக்கள் ஆவேசம்! வீடியோ

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தை மற்றும் மகன் மீது, அவர்களுக்குப் பின்னால் வந்த கே.டி.எச் (KDH) ரக வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து, கே.டி.எச் வாகனத்தில் பயணித்தவர்கள் வாகனத்தை அவ்விடத்திலேயே கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகச் சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற வாகனச் சாரதி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்திச் சாவகச்சேரி காவல் நிலையம் முன்பாக ஊரவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments