பாதுக்கையில் 20 வயது யுவதி உயி ரிழப்பு
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயது யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுவதியின் பெற்றோர் வங்கி தேவைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பெற்றோர் மீண்டும் வீடு திரும்பியபோது, மகள் அறையில் அசைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரி ழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
யுவதியின் உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.





