Home புதினங்களின் சங்கமம் கட்டுநாயக்காவில் தனது பகுதியில் சொருகிய நிலையில் அரை கிலோ தங்க கட்டிகளுடன் சிக்கிய இளம் ஆசிரியை!

கட்டுநாயக்காவில் தனது பகுதியில் சொருகிய நிலையில் அரை கிலோ தங்க கட்டிகளுடன் சிக்கிய இளம் ஆசிரியை!

அதிகாலை நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு! மர்ம பகுதியில் மறைத்திருந்த 2.45 கோடி தங்கத்துடன் சிக்கிய இளம் ஆசிரியை!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்று அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் (2.45 கோடி) ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நூதன முறையில் கடத்த முயன்ற இளம் பெண் ஒருவர் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL-309 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.00 மணியளவில் குறித்த பெண் பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
​விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள், அவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையின் போது, அவர் தனது மர்ம பகுதியில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரண்டு சிறிய பைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது அதிகாரிகளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

கைப்பற்றப்பட்டவை – 436 கிராம் எடையுள்ள 04 முழுமையான தங்க பிஸ்கட்டுகள் மற்றும் மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் ஒரு பகுதி.

விசாரணையில், கைதானவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தனியார் பாடசாலை ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது…

கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் குறித்த ஆசிரியை ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்…
​அங்கு முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் முடிவில், குறித்த பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தத் தங்கக் கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து மேலதிக. விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
​

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments