Home புதினங்களின் சங்கமம் விளக்கமறியலின் கீழ் வைத்தியசாலை கட்டிலில் இருந்து பொலிசாரை பச்சை தூசணத்தில் கஸ்ஸப தேரர் ஏசும் காட்சி!

விளக்கமறியலின் கீழ் வைத்தியசாலை கட்டிலில் இருந்து பொலிசாரை பச்சை தூசணத்தில் கஸ்ஸப தேரர் ஏசும் காட்சி!

அனுராதபுரம், ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், பொலிஸ் அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில், வைத்தியசாலைப் படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் தேரர், தன்னைச் சூழ்ந்திருந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் நேற்று (12) சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள், போராட்டம் நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கும், ரஜாங்கனயே சத்தரதன தேரர் உள்ளிட்ட மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அனுராதபுரம் புனிதப் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனிதப் பிரதேசத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலம் ஏற்கனவே நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments