ஊர்காவற்துறையில் காலாவதி பொருட்கள் விற்பனை. 72,000 ரூபா தண்டத்துடன் சிறை தண்டனையும் விதிப்பு.
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்தமை, நலத்துக்கொவ்வாத வகையில் களஞ்சியப்படுத்தியமை போன்ற குற்றங்களிற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நான்கு வியாபார நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வழக்கு் தொடரப்பட்டது.
நேற்றைய தினம் (12.11.2026) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் மொத்தமாக 72 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் ஐந்து வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத காலசிறை தண்டனையும் வழங்கப்பட்டது.





