Home புதினங்களின் சங்கமம் யாழில் போதைப் பொருள் பாவித்த பின் காரில் தனது குடும்பத்தை ஏற்றி வந்த பன்னாடை உட்பட...

யாழில் போதைப் பொருள் பாவித்த பின் காரில் தனது குடும்பத்தை ஏற்றி வந்த பன்னாடை உட்பட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாகன சாரதிகளுக்கு போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த சாரதி உள்ளிட்ட இரு சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வீதியில் பயணித்த வாகன சாரதிகள் 52 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையில், கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த நபர் ஒருவர் உட்பட இருவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் .

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments