Home புதினங்களின் சங்கமம் அநுராதபுர விகாரையில் அரசாங்கத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பிக்குகளை விரட்டி அடித்த பொதுமக்கள்! வீடியோ

அநுராதபுர விகாரையில் அரசாங்கத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பிக்குகளை விரட்டி அடித்த பொதுமக்கள்! வீடியோ

கஸ்ஸப்ப தேரரின் போராட்டக் கூடாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.!!

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரண்ட பொதுமக்கள், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பொதுமக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தேரர்கள் இடையிலும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இராஜாங்கனை சத்தாரதன தேரர் தாக்கப்பட்டு, அவரது காவி உடை அகற்றப்பட்டு போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவம்பர் 7ஆம் திகதி கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 11ஆம் திகதி கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments