Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண குடும்பப் பெண்ணுக்கு இந்தோனேசியாவில் நடக்கும் கொடுமை!!

யாழ்ப்பாண குடும்பப் பெண்ணுக்கு இந்தோனேசியாவில் நடக்கும் கொடுமை!!

இந்தோனேசியாவில் மகளுடன் கடந்த 12 ஆண்டுகளாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த Geethabanu Pranavan.

பருத்தித்துறையை பிறப்பிடமாக கொண்ட Geethabanu, 2014ஆம் ஆண்டு கணவர் மற்றும் மகளுடன் இலங்கையை விட்டு வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடைந்தார்.

2022ஆம் ஆண்டு கணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் இவர், இந்தோனேசியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்.

அகதிகளுக்காக வழங்கப்பட்டு வந்த தங்குமிட மற்றும் உணவு உதவிகள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தோனேசியாவில் சட்டபூர்வமாக வேலை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால் வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி இவரது நிலைமை தொடர்பான செய்தி வெளியாகியதை தொடர்ந்து, இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் Arun Hemachandra இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக முகநூல் கருத்தில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

எனினும், இவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா? அல்லது இவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி கிடைத்துள்ளதா? என்பது தொடர்பில் இது வரை உறுதிப்படுத்தப்பட்ட புதிய அறிவிப்பு வெளியாகவில்லை.

12 ஆண்டுகளாக தொடரும் அகதி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு,மகளுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே இந்த தாயின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments