பிரித்தானியாவின் Bushey பகுதியில் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, சுமார் 230,000 பவுண்டுகள் பணத்தை மோசடி செய்த இலங்கை தமிழ் தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
மகேந்திரா சர்வேந்திரா – வயது 52 என்பவர் 2022ஆம் ஆண்டு நபர்ளுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டு, அவர்களது வீடுகளுக்கு மறுநிதியளிப்பு (Remortgage) ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். பின்னர், கடை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற வணிகங்களில் முதலீடு செய்வதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்.
ஆனால், அந்தபபணம் வணிகங்களில் முதலீடு செய்யப்படவில்லை. மாறாக, ஆடம்பர வாழ்க்கை முறைக்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் Mahendra Sarvendra இற்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி மிருணாளினி சர்வேந்திரா -வயது 51 என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது 3 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2026 ஒக்டோபர் 30ஆம் திகதி St Albans Crown Court இந்த தண்டனையை அறிவித்தது.
மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.





