Home புதினங்களின் சங்கமம் பெற்றோரே அவதானம்!! யாழில் அப்பாவின் 3 லட்சம் ரூபா பணத்தை ஒன்லைன் விளையாட்டில் செலவு செய்த...

பெற்றோரே அவதானம்!! யாழில் அப்பாவின் 3 லட்சம் ரூபா பணத்தை ஒன்லைன் விளையாட்டில் செலவு செய்த 13 வயது மாணவனும் நண்பர்களும்!! கணவனை விட்டுப் பிரிந்தார் மனைவி!!

யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் தனது தந்தையின் பண அட்டை மூலம் 950 டொலர்களை ( 3 லட்சத்திற்கும் மேலான தொகை) ஒன்லைன் விளையாட்டில் செலவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவன் தனது நண்பர்கள் மூலம் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதாகவும் அவர்களின் துண்டுதலின் பேரில் தனது தந்தையின் பண அட்டையைத் திருடி பாடசாலைக்கு கொண்டு சென்று அங்கு தாங்கள் கொண்டு வந்திருந்த கைத்தொலைபேசிகளில் பண அட்டை மூலம் ஒன்லைன் விளையாட்டுக்களை விளையாடியும் பதிவிறக்கம் செய்தும் மாணவனின் தந்தையின் பண அட்டையிலிருந்து ஒரே நாளில் 950 டொலர்களை நாசமாக்கியுள்ளதாகத் தெரியவருகி்ன்றது.

குறித்த மாணவன் கொழும்பு -யாழ் சேவையில் ஈடுபுடும் சொகுசு பஸ்களின் உரிமையாளரான தனது தந்தையின் கையடக்க தொலைபேசிகளில் ஒன்றான பண அட்டைக்குரிய தொலைபேசியின் சிம்மை இன்னொரு சாதாரண தொலைபேசிக்கு மாற்றி அதனை பாடசாலைக்கு கொண்டு சென்று டொலர்களில் பணமாற்றம் செய்யும் போது வங்கியால் அனுப்பப்படும் OTP இலக்கத்தைப் பெற்று இற்த திருவிளையாடல்களை செய்துமுடித்துள்ளான்.

இச் சம்பவம் நடைபெற்று சில வாரங்களின் பின்னரே அந்த பண அட்டைக்குரிய கணக்கு வழக்குகுளை பரிசோதிக்கும் போது டொலர்களில் செலவு செய்தமை கண்டு பிடிக்கப்பட்டு தந்தை விசாரணையை மேற்கொண்ட போதே இந்த விடயம் பிடிபட்டுள்ளது.

இதே வேளை குறித்த டொலர் பரிமாற்றத்தை மனைவியின் தம்பியே மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாணவனின் தந்தையால் மனைவியின் தம்பி தாக்கப்பட்டு அது தொடர்பாக பொலிஸ் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

தற்போது இந்த முறைகேட்டின் சூத்திரதாரி யார் என்பதை அறிந்து மகன் பிடிபட்ட பின்னர் ஏறபட்ட குடும்ப மோதலில் மனைவி கணவனை விட்டுப் பிரிந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதே வேளை குறித்த மாணவன் மற்றும் மாணவனின் நண்பர்கள் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டு தந்தை மற்றும் பாடசாலைச் சமூகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments