23 கோடியே 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருள்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதியில், ‘புளியம்பழ மிட்டாய்’ அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட நான்கு டின்களில் 2 கிலோ 102 கிராம் குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மேலும், மிட்டாய்கள் அடங்கியதாகக் குறிப்பிடப்பட்ட 6 பொதிகளில் மிட்டாய் வடிவில் தயாரிக்கப்பட்ட 5 கிலோ 260 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





