Home புதினங்களின் சங்கமம் யாழில் ATM ல் பணம் எடுத்து வருபவர்களை வாசலில் நின்று பலர் முன்னிலையில் தாக்கி பணம்...

யாழில் ATM ல் பணம் எடுத்து வருபவர்களை வாசலில் நின்று பலர் முன்னிலையில் தாக்கி பணம் பறிக்கும் காவாலி! வேடிக்கை பார்க்கும் கடைக்காரன்கள்! பொலிசார் அமைதி!

Screenshot

யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்க போதை ஆசாமி ஒருவர் இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து ஒரு தொகை பணத்தை அபகரித்துள்ளார்.
கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நிறை போதையில் நின்ற நபர் , எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.

அதன்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட போது, இளைஞன் பணம் கொடுக்க மறுத்த போது, இளைஞனுடன் தர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.

அதன்போது, அருகில் உள்ள கடை பணியாளர்கள் வீதியில் சென்றவர்கள் என பலரும் அதனை வேடிக்கை பார்த்திருந்தனர்.

இது தொடர்பில் கடை பணியாளர்களிடம் வினாவிய வேளை, குறித்த நபர் தினமும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவர் எனவும், தாம் அவருடன் முரண்பட்டால் , கடையின் மீது தாக்குதலோ , வியாபரத்திற்கு இடையூறோ மேற்கொள்வார் என்பதால் தாம் அமைதியுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

குறித்த நபரின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments