நேற்று முந்தினம் அதிகாலை யாழ் புங்குடுதீவு ஜே 22 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி வயலூர் முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள காணிக்குள் அதாவது பிரதான வீதியிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள காணிக்குள் நிறைமாத கர்ப்பிணி( சினைப்பசு ) பசு ஒன்றும் மற்றுமொரு பசு ஒன்றும் சட்டவிரோத குற்றச்செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற கும்பலை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டுள்ளன. குறித்த சினைப்பசுவின் வயிற்றுக்குள்ளிருந்து முழுமையான உடலமைப்பை கொண்ட கன்றினை வெளியே எடுத்து வீசிவிட்டு பசுவினை இறைச்சியாக்கிய மாபாதக செயலை குற்றவாளிகள் மேற்கொண்டுள்ளனர். பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் தென்பட்டதால் கொல்லப்பட்ட மற்றைய பசுவை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
அத்துடன் அங்கு சட்டவிரோத இறைச்சியாக்கும் நோக்குடன் கட்டப்பட்டிருந்த பசு மாட்டினை மடத்துவெளி ஜே 23 கிராமசேவகர் ச. சிறீதரன், தீவகம் சிவில் சமூகம் உப தலைவர் கருணாகரன் குணாளன், புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் கஜேந்திரன் மற்றும் ஒரு பொதுமகனும் இணைந்து மீட்டுள்ளனர்.
பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே. வினோத் அவர்களுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு ஏற்ப உடனடியாக அங்கு விரைந்த அவரும் பொலிஸ் கொன்ஸ்டபிள் வினோத்தும் இணைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு உடனடியாக களத்திலிறங்கி புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவு பாணாவிடை சிவன் கோவிலுக்கு மிக அருகாமையில் காணப்படுகின்ற மீன் வாடி ஒன்றினை சோதனையிட்டனர்.
அங்கு மாடுகளை தடம் வைத்து பிடிப்பதற்குரிய ஏராளமான கேபிள் கம்பிகளும், மாடுகளை வெட்டுவதற்கு உபயோகித்த கத்திகளும் கைப்பற்றப்பட்டதோடு அங்கு நின்ற இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீன் வாடியின் உரிமையாளராக நயினாதீவை சேர்ந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரான பாட்சா என்பவர் செயற்படுவதாகவும் அந்நபர் புங்குடுதீவில் திருமணம் செய்ததாகவும் அவரது இரு மகன்களுமே கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாட்சா என்கிற நபர் கடந்த 2025 டிசம்பர் 31 ம் திகதியன்று புங்குடுதீவிலிருந்து நூதன முறையில் மோட்டார் சைக்கிளில் மீன் கொண்டு செல்லும் பெட்டிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் 35 கிலோ மாட்டிறைச்சியைக் கடத்திச் சென்றபோது வேலணை அராலிச் சந்தியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
Home புதினங்களின் சங்கமம் யாழ் புங்குடுதீவில் ஈபிடிபி கும்பல் கொடூரம்! கர்பிணியை அறுத்து குழந்தையை வெளியே வீசிய ஈபிடிபி கட்சி...




