Home புதினங்களின் சங்கமம் கணவனையும் 4 பிள்ளைகளையும் விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 30 வயது குடும்பப் பெண் கைது!

கணவனையும் 4 பிள்ளைகளையும் விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய 30 வயது குடும்பப் பெண் கைது!

தனது நான்கு பிள்ளைகளையும் கைவிட்டு, கள்ளக் காதலனுடன் தப்பியோடி பிள்ளைகளைக் கொடூரமாகக் கைவிட்ட குற்றச்சாட்டில் தாயொருவரும் அவருக்குக் உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் (03ஆம் திகதி) வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் குழுவுக் கூட்டத்தில் கிடைத்த தகவலுக்கமைய, பிள்ளைகளின் தந்தை, பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயாரான 30 வயது பெண், 29 வயதான நபருடன் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கடந்த 02.09.2026 அன்று முதல் பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டு காதலனுடன் வாழத் தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

தனது மூத்த மகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும், ஏனைய பிள்ளைகளை அவரிடம் பொறுப்பளித்துவிட்டுத் தான் செங்கல் அறுக்கும் தொழிலுக்குச் செல்வதாக பொலிஸாரிடம் தந்தை தெரிவித்துள்ளார்.

தாய் தங்களை விட்டுச் சென்றமையினால் பிள்ளைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ஆரோக்கியத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாயால் கைவிடப்பட்ட பிள்ளைகளில் 12 மற்றும் 04 வயதுடைய இரு மகள்களும், ஒரு வயதும் மூன்று மாதங்களும் நிரம்பிய இரட்டை ஆண் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்ட தாயும் அவரது கள்ளக்காதலனும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments