Home புதினங்களின் சங்கமம் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த தமிழ் குடும்பப் பெண் கொலை! கொன்ற கள்ள காதலனும் வீட்டின்...

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த தமிழ் குடும்பப் பெண் கொலை! கொன்ற கள்ள காதலனும் வீட்டின் பின் பக்கம் சடலமாக மீட்பு! தமிழர் பகுதியில் நடப்பது என்ன?

  புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 அவசர தொலைபேசி அழைப்பையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

38 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், குருநாகல் பகுதியைச் சேர்ந்தவரும், குறித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள எதிர்பார்த்திருந்தவருமான ஆண் ஒருவர் வீட்டின் பின்பகுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த பெண் முன்னர் திருமணமானவர் எனவும், முதல் கணவரிடமிருந்து பிரிந்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த நபருடன் மறுமணம் செய்துகொள்ளும் நோக்கில் இருவரும் அப்பெண்ணின் வீட்டிலேயே ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இக்கொலை மற்றும் தன்னுயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments