Home புதினங்களின் சங்கமம் யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளினி கொலை சம்பவம்! மகளுக்கு மருமகனுக்கும் நீதிமன்றில்...

யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளினி கொலை சம்பவம்! மகளுக்கு மருமகனுக்கும் நீதிமன்றில் நடந்தது என்ன?0

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை , படுகொலை செய்தமை ,நகைகளை கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்துள்ளதாக , விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு தனித்தனியாக குற்றங்கள் வாசித்து கட்டப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) என்பவர் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் , 21ஆம் திகதி அவரது சடலம் தனக்கிளப்பு காட்டு பகுதியில் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலையான விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை கைது செய்துள்ள நிலையில் , அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு , யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , பொலிஸாரினால் மன்றில் தாக்கல் செய்யப்பட்ட, குற்றப்பத்திரிக்கை சந்தேக நபர்களான விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனுக்கு தனித்தனியே வாசித்து காட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து சுருக்க முறையற்ற விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த மன்று , சந்தேகநபர்கள் இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடித்தது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments