Home புதினங்களின் சங்கமம் களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சசிகுமார் சிக்கியது எப்படி?

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சசிகுமார் சிக்கியது எப்படி?

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் பஸ்வண்டி ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ தினமான நேற்ற வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் கதுருவெலவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பிரயணிகள் பஸ் வண்டி ஒன்றை வாழசை;சேனை நாவலடி பகுதில் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு தன்னாமுனை பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய முருகேஷ் சசி குமார் என்பவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் கரம்பா பாலாவி புத்தளம் சொந்த இடத்தை சேர்ந்த இவர் பிள்ளையார் கோவில் வீதி, ஆறுமுகத்தான் குடியிருப்பு தன்னாமுனை, ஏறாவூர். வசித்து வரும் இவர் கடந்த 16.01.2023 திகதி 9 மில்லி மீற்றர் ரக கைதுப்பாக்கி ஒன்று, மகசீன் ஒன்று, தோட்டாக்கள் 3, எஸ்.எப்.ஜி. 87 ரக கைகுண்டு ஒன்றுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்தவரை விசேட அதிரடிப்படையினர் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments