Home புதினங்களின் சங்கமம் யாழ் தனங்களப்பு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி! மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டாரா?

யாழ் தனங்களப்பு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி! மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டாரா?

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் கேரதீவு சங்குப்பிட்டி பாலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த 31 வயதான ஆர்னோல்ட் அன்ரனி என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை அப் பகுதி மணல் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்பு பகுதி எனவும் குறித்த பொலிஸ்காரர் திட்டமிட்டு வேறு வாகனத்தால் இடித்து தள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.