அதி வேகம்! 24 வயது வரதராஜா பிரணவன் பலி!
திருகோணமலை – தம்பலகாமத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வரதராஜா பிரணவன் (வயது 24 – பட்டிமேடு, தம்பலகாமம்)
அதி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் (Concrete Mixer Truck) நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதாகத் தெரயவருகின்றது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரணவன் உயிரிழந்துள்ள நிலையில், தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

