அடிக்கடி வீட்டுக்கு வந்து போகும் நபரால் மீரா அடித்துக் கொலை!! மட்டு’வில் நடந்தது என்ன?
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். அப்படியே தந்துள்ளோம்…
பல நாள் சோறு போட்டு பசி தீர்த்த தாயை அடித்து கொலை செய்த சம்பவம் காத்தான்குடியில் பதிவு
மஞ்சந்தொடுவாயில் பெண் கொலை
நடந்தது என்ன.?
காத்தான்குடி பொலிசாரின் அதிரடியால் கைதான சந்தேக நபர்..
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய ஆதம்பாவா மீரா நாச்சி எனும் தாய் ஒருவர் கடந்த 23.08.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மிக மோசமாக தாக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 27ம் திகதி வியாழக்கிழமை காலை மரணமடைந்துள்ளார்.
இவரது சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதம்பாவா மீரா நாச்சி என்பவரின் கணவர் ஜூனைதீன் என்பவராகும்..
கணவர் ஒரு கூலித் தொழிலாளி. இருவருக்கும் ஒரு ஆண் பிள்ளை உண்டு. மகன் திருமணம் செய்து அவர் வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வருகிறார்.
குறித்த மீரா நாச்சி சில காலமாக சிறிய சில்லறைக் கடை ஒன்று வைத்து நடாத்தி வருகிறார்..
சம்பவ தினமான 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை கணவர்
ஜூனைதீன் வழமையாக தனது கூலித் தொழிலுக்கு சென்று விட்டார்.
வழக்கமாக மீரா நாச்சியின் அந்த சிறிய கடைக்கு சாமான்கள் வாங்குவதற்கு பெரியவர்கள் சிறுவர்கள் என பலரும் வருவது உண்டு.
சம்பவ தினமான அன்று இரண்டு சிறுவர்கள் சாமான் வாங்குவதற்கு கடைக்கு சென்றபோது மீராநாச்சியை காணவில்லை.
சிறுவர்கள் சற்று உள்ளே சென்று பார்த்த போது வீட்டின உள்பகுதியில் உள்ள சமையல் அறை பகுதியில்
மீராநாச்சி இரத்தம் தோய்ந்த நிலையில் கிடப்பதைக் கண்டு சிறுவர்கள் அச்சமடைந்தனர்
வாய் பேச முடியாமல் காணப்பட்ட மீராநாசசி இரண்டு சிறுவர்களையும் கையை காட்டி அழைத்துள்ளார்
சிறுவர்கள் அழுது கொண்டு வெளியே வந்து பெரியவர்களிடம் மீராநாச்சி இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்படுகிறார் என்று கூறியவுடன் அயலவர்கள் எல்லாம் ஓடிப்போய் பார்த்தபோது மீராநாச்சி தாக்கப்பட்டு படுகாயத்துடன் இரத்தம் ஓடிய நிலையில் காணப்பட்டுள்ளார்
உடனே அவசர அம்புலன்ஸ்
வண்டியை வரவழைத்து அதில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்
இதை அடுத்து கணவர் வந்தபோது இந்தச் செய்தி கணவருக்கும் பின்னர் மகனுக்கும் குடும்ப உறவினர்களும் எட்ட உடனே அவர்களும் வீட்டுக்கு விரைந்தனர்
என்ன நடந்தது எது நடந்தது யார் மீராநாச்சியை தாக்கியது என்றெல்லாம் அயலவர்கள் குடும்பத்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்க காத்தான்குடி பொலீசாருக்கும் விடயத்தை தெரியப்படுத்தி முறைப்பாடு செய்தனர்
உடனே காத்தான்குடி பொலீசார் தீவிரமான அதிரடி விசாரணையை தொடங்கினர்
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. (AMR.Nalaka Alahakon). நாலக அலி கோன் அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும்
காத்தான்குடி பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரியும் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரியுமான பொலீஸ் பரிசோதகர் ரியான் மதுசாந்த
(Rishan madushantha) தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்தார்.
பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மீராநாச்சியின் வீட்டுக்கு முன்னாலுள்ள காத்தான்குடி நகர சபை உறுப்பினரான முஜீப் ஜூனைட் அவர்களின் வீட்டிலுள்ள சி.சி.டி.வி கமராவை பரிசோதித்த போது அந்த கமராவில் ஒருவர் அந்த கடைக்குள் இருந்து வெளியில் ஒரு வகையாக தள்ளாடிக் கொண்டு செல்வதை பார்த்த பொலீசார் உடனே அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் போதூதான் மீராநாச்சிய தாக்கிய நபர் யார் என்ற உண்மை வெளியில் வந்தது.
குறித்த அந்த நபர் கடைக்கு பீடி வாங்க சென்றபோது மீராநாச்சியை தாக்கிய சந்தேக நபர் அங்கே காணப்பட்டுள்ளார்.
அந்த சந்தேக நபரை இவர் அடையாளப்படுத்த உடனே பொலீசார் அவரை கைது செய்தனர்
அப்துல் காதர் பக்கீர் முகைதீன் என்ற சந்தேக நபர் உடனேயே கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபர் இந்த மீராநாச்சியின் அதே பகுதியில் வசித்தவர் இப்போது அவர் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு ஒள்ளிக்குளத்தில் வசிக்கின்றார்
மீராநாச்சியை தாக்கி கொலை செய்த இந்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக மீராநாச்சியின் வீட்டிற்கு வந்து செல்பவர்
மீரா நாச்சி சோறு போட்டு கொடுத்து பல தடவை சாப்பிட்டு சென்றவர்
மீரா நாச்சியிடம் அடிக்கடி கடன் வாங்கிக் கொண்டு சென்று அதை திருப்பிக் கொடுக்க மாட்டார்.
மீரா நாச்சியின் கணவரோடும் ஒன்றாக கூலி தொழில் செய்பவர்
மீராநாச்சியின் வீட்டில் அடிக்கடி வந்து சாப்பிடுவதுடன் தேநீர் அருந்திவிட்டும் செல்வார்
சம்பவ தினத்தன்று கூட மீரா நாச்சியிடம் தேணீர் வாங்கி குடித்துவிட்டு பணம் கேட்டுள்ளார்
மீரா நாசசி பணம் கொடுக்க மறுத்த போது தான் இவரை அங்கு கிடந்த பாரிய தடியினால் பலமாக பல தடவை தாக்கியுள்ளார்.
மீராநாச்சி இவ்வளவு காலம் கொடுத்த சாப்பாட்டுக்கு கூட ஒரு நன்றிக்கடன் கூட இல்லாமல் அந்த நிமிடமும் தேநீரை அருந்தி விட்டு மீராநாச்சியை கொடூரமாக இவர் தாக்கியுள்ளார்
இவைகள் பொலீசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன
மட்டக்களப்பு போதனை வைத்தியசலையில்
சிகிச்சை பெற்று வந்த மீராநாசசி
27.08.2026 வியாழக்கிழமை மரணம் அடைந்துள்ளார்
இதையடுத்து மீராநாச்சியின் வீட்டுக்கு வந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இடத்தையும் பார்வையிட்டுச் சென்றார்
இப்போது சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலீசார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
மீராநாச்சியின் ஜனாசா (சடலம்) பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது
வெள்ளிக்கிழமை 28 ஆம் திகதி அன்று மஞ்சந்தொடுவாய் முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் அஸர் தொழுகையின் பின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மைய்ய வாடியில் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது.
மிக வேகமாக விசாரணைகளை தொடங்கி கொலை செய்த சந்தேக நபரை கைது செய்ய வேகமாக செயற்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. (AMR.Nalaka Alahakon). நாலக அலககோன்
காத்தான்குடி பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரியும் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரியுமான பொலீஸ் பரிசோதகர் ரிஸான் மதுசங்க
(Rishan madushantha) ஆகியோரை பாராட்டியே ஆகவேண்டும்
மிகவும் கொடூரமான இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டன் மீராநாச்சி மீது அனுதாபமும் ஏற்பட்டுள்ளது




