யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்ட காட்சிகள் இதோ!! வீடியோ
யாழ். குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வீடுகளை இலக்கு வைத்து தங்க நகைகளை திருடி, பின்னர் அவற்றை அடகு வைத்து வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாரின் விசாரணைகளில், கோப்பாய் பகுதியில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் தலா ஒரு வீட்டிலும் என ஐந்து வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின்போதே பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.









