யாழில் மோட்டுச் சயிக்கிளில் அதி வேகமாச் சென்ற 18 வயது பிரதீபன் பலி!!
மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர், வடமராட்சி வட அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த சகீன் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இறுதிக்கிரியைகள் வட அல்வாய் நக்கீரன் பகுதியில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

