புதினங்களின் சங்கமம்

பேஸ்புக்கில் நையாண்டி? யாழில் வேலையற்ற பட்டதாரி விபூசன் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் செவ்வாய்க்கிழமை (4) தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை சமூகவலைத்தளங்களில் பலரும் நையாண்டி செய்து வருவதால் குறித்த பட்டதாரிகள் பலர் பெரும் விரக்தியில் இருப்பதாக விபுசனின் மரணம் தொடர்பாக பல வேலையற்ற பட்டதாரிகள் தமது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

May be an image of 1 person and text that says "கண்ணீர்க் காணிக்கை தோற்றம் 19 மறைவு • 01 04 • 02 1997 1997 2025 本志と எங்களது உற்ற உயிர் தோழன் அமரர் தங்கவேல் விப்சன் கொடிய காலனின் பிடியில் நீ சென்றதால் உற்ற நண்பர்கள் நாம் படும் பாட்டை யாரடா ஆற்றிடு......... அன்போடு நாம் பழகி உறவாடிய நற்பின் காலங்கள் எம் கண்முன்னே நிழலாக வந்து போகுதடா நண்பா..... கண்பனின் நரிவால் துயரும்றிருக்கும் குருப்பத்தாருக்கு எமது ஆழ்க்த அனுதாயங்கனைத் தெரிவிப்யதோடு கண்பா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகினறோம். பிரிவால் துயருறும் AHS 12 th Batch (UOJ)"

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x