யாழில் 35 வயது குடும்பப் பெண்ணுடன் ஓடிய 20 வயது மாணவனால் இரு கிராமத்திற்கு இடையில் முறுகல் நிலை !!
யாழ் வலிகாமம் பகுதியில் இரு கிராமங்களுக்கிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகத் தெரியவருகின்றது. இரு கிராமத்தவர்களும் ஒருவருக்கொருவர் மோதும் நிலையில் உள்ளார்கள். 35 வயதான ஒரு பிள்ளையின் தாயான கோடிஸ்வரன் ஜெயராதாவை 20 வயது மாணவனான விமேந்திரன் தஸ்மின் கூட்டிச் சென்று தலைமறைவாகியுள்ளான். குறித்த மாணவன் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வருபவன் எனவும் இந்த வருடம் இரண்டாவது தடவையாக இன்னும் ஓரிரு நாட்களில் எ.எல் பரீட்சை எழுத ஆயத்தமான மாணவன் எனவும் தெரியவருகின்றது.
மாணவனுன் தனது 6 வயதான பிள்ளையையும் கூட்டிக் கொண்டு தலைமறைவான ஜெயராதாவின் கணவர் கொழும்பில் கட்டட வேலைகள் செய்பவர் எனத் தெரியவருகின்றது. தனது மனைவி தலைமறைவானதை அடுத்து யாழ்ப்பாணம் வந்த கணவன் மனைவியின் தாயார் மற்றும் சகோதரிகளைத் தாக்கிய பின்னர் மாணவனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்த முற்பட்டுள்ளார்.
அதே வேளை மாணவனின் உறவுகளும் தலைமறைவான இருவரையும் தேடித் திரிவதாகவும் குடும்பப் பெண்ணின் ஏரியாவுக்குள் புகுந்து சிலருடன் வன்முறையில் ஈடுபட்டதால் இரு தரப்புக்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரியவருகின்றது, புகைப்படத்தில் உள்ள இவர்கள் இருவரையும் கண்டால் தம்மிடம் தெரிவிக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளதுடன் சில தொலைபேசி இலக்கங்களையும் தந்துள்ளார்கள். ஆனால் நாம் அவற்றை பிரசுரிக்கவில்லை. ஏனெனில் இருவரும் பிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி கடும் காயங்களுக்கு உள்ளாக நேரிடலாம். ஆகவே இவர்கள் இருக்கும் இடம் அறிந்தவர்கள் இவர்கள் தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
மாணவனுடன் தலைமறைவான குடும்பப் பெண் தையல் வேலை செய்பவர் எனவும் சிறுவயதிலிருந்தே மாணவன் மற்றும் அவனது சகோதரங்களுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்து வந்தவர் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

