இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

மகனின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு செய்த மாமனாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த மருமகள்!

உத்தரப் பிரதேசத்தின் முசஃபர்நகர் மாவட்டத்தில், கணவர் இல்லாத நேரங்களில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் மாமனாரை, மருமகள் கூர்மையான பிளேடால் உறுப்பை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வரும் கணவர் வீட்டில் இல்லாததை பயன்படுத்தி, மாமனார் தொடர்ந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த நாளில், மாமனார் தன்னை பாலியல் ரீதியாக தாக்க முயன்றதாகவும், அதிலிருந்து தப்பிக்க தற்காப்புக்காகவே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காயமடைந்த மாமனார் முதலில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x