Home புதினங்களின் சங்கமம் இளம் குடும்பப் பெண் கணவனால் வெட்டிப் படுகொலை!

இளம் குடும்பப் பெண் கணவனால் வெட்டிப் படுகொலை!

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர், சம்பவத்தின்போது அயல் வீட்டில் மதுபோதையில் நின்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments