யாழ் மங்களா தளபாடக்கடை முதலாளி ஜெயந்தனின் கார் போதைப்பொருள், வாள்களுடன் மீட்பு!! ஒருவன் கடத்தி சித்திரவதை!! காதல் பிரச்சனையாம்!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய காரின் உரிமையாளர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் காதல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவரை ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று காரில் கடத்திச் சென்று, அடித்து துன்புறுத்தி, கத்தியால் தாக்கிய பின்னர் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் இறக்கிவிட்டு தப்பிச் செல்லும்போது வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மங்களா காட்சியறை உரிமையாளரான கே. ஜெயந்தன் எனும் 733280999V அடையாள அட்டை இலக்கமுடைய நபருடையது என கூறப்படுகிறது.
இந்த குற்றச்செயலானது மங்களா காட்சியறை உரிமையாளரின் அனுசரணையுடன் அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் பாண்டி எனப்படும் கோடீஸ்வரன், கிரிசாத்மன் எனும் 200229500261 அடையாள அட்டை இலக்கமுடைய நபரின் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயந்தன் மற்றும் கோடீஸ்வரன் கிரிசாத்மன் ஆகிய இருவரும் சீனாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இவர்கள் மாதத்தில் மூன்று தடவை சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதுடன், வட்டிக்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய இவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

