பிருத்தானியாவில் தமிழ் பெண் வைத்தியர் யாழிலிருந்து சென்ற 71 வயது கணவனின் தந்தை மீது பாலியல் புகார்!! மாமனார் கைது!
பிருத்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் NHS Trusts இல் வைத்தியராக கடமையாற்றும் 37 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவர், தனது மாமனார் தன் மீது பாலியல் ரீதியில் தகாத நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழிலிருந்து சென்ற 71 வயது முதியவரை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றார்கள்.
இருப்பினும் குறித்த பெண் மருத்துவர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது மாமனார் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பெண் வைத்தியரின் கணவன் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பெறுமதி மிக்க சொத்துக்களை தனது தந்தை அவுஸ்ரேலியாவில் உள்ள சகோதரி மற்றும் யாழில் உள்ள சகோதரனுக்கு பகிா்ந்து கொடுத்த விரக்தியில் தனது தந்தையை லண்டன் வரவழைத்து பழி வாங்கியுள்ளதாக கணவன் கூறியுள்ளார்.
தனது மனைவி மிகவும் திட்டமிட்டு தனது தந்தை பொதுவாக குளிக்கும் குளியலறைக்குள் புகுந்து தொலைபேசியின் கமராவை இயக்க நிலையில் வைத்துக் கொண்டு குளிக்கும் பாணியில் செயற்பட்டுள்ளார். தனது குளியல் அறைக்குள் யாரோ புகுந்துள்ளார்கள் என அறிந்து அதனை அறிவதற்காக அங்கு சென்ற தனது தந்தையை கேவலமான முறையில் இவ்வாறு பொலிசாரிடம் மாட்டியுள்ளதாக கணவன் கூறுகின்றார். மனைவி மற்றும் தமக்கு தமது வீட்டில் பிரத்தியோக குளியலறை காணப்பட்ட போதும் மனைவி தந்தையின் பொதுவான குளியலறைக்குள் புகுந்தது எதற்காக எனவும் என்ன காரணத்துக்காக தொலைபேசிக் கமராவை இயக்கி வைத்திருந்தார் எனவும் கணவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் காரணமாக முதியவர் தற்போது நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படாது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த பெண் வைத்தியரின் கணவரும் இலங்கையில் வைத்தியராக பணியாற்றி லண்டன் சென்றவர் எனவும் ஆனால் அவர் அங்கு தற்போது வைத்தியராக பணியாற்றாது வேறு ஒரு வேலைக்கு சென்று வருவதாகத் தெரியவருகின்றது. கணவன், மனைவி இருவரும் சொத்துப் பிரச்சனையால் சில மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் எனவும் அதன் பின்னர் கணவனின் உறவுகள் பேச்சுவார்த்தை நடாத்தி சேர்ந்து வாழ்ந்தார்கள் எனவும் கணவனின் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
குறித்த முதியவர் ஓய்வு பெற்ற அதிபர் எனத் தெரியவருகின்றது.

