வட்டுக் கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிப பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கனடாவிலிருந்து வந்து தனது வீட்டில் மகனுடன் தங்கியிருந்த குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக இருப்பதாக வட்டுக் கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது சடலத்தின் மீது அடிகாயங்கள் இருப்பதனையும், வீட்டில் உள்ள பொருட்கள் வீசப்பட்டு இருப்பதையும் அவதானித்தனர்.
அதன்பின்னர் இந்த விடயமானது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சம்பவ நடந்த இடத்தினை பார்வையிட்டார். சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதால், சடலத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் போது குறி்த்த பெண்ணின் உடலில் கைகளாலும், வயர்களாலும் பொல்லுகளாலும் அடிக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டது
உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டது. குறித்த பெண்ணும் அவரது மகனுமே வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில வட்டுக் கோட்டை பொலிசார் மகனை கைது செய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக் கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல இலட்சம் ரூபா பணத்தினை வீதியில் வீசியதுடன், பல இலட்சம் ரூபா பணத்தினை சேதப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது





