ஹோட்டல் அறைக்குள் யுவதி வல்லுறவு! காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது.!
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஒருவர், பா*லியல் து*ஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டில் காத்தான்குடி பொலிஸாரால் #கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, இவர் பா*லியல் து*ஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட #பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் #முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, #விசாரணைக்காக அழைக்கப்பட்ட குறித்த நகர சபை உறுப்பினரை, ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் #காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

