2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து
கல்வி நடவடிக்கைகளும் நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நிறைவடையவேண்டும்
என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து கல்வி
நடவடிக்கைகளும் நாளைமறுதினம் புதன் கிழமை (31)நள்ளிரவு 12 மணியுடன்
நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அமைவாக மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் தடை செய்யப்படுகின்றன.
பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்ததாவது:
இம்முறை உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 229
பரீட்சார்த்திகளும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 475
பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
மொத்தமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைகளில் தேற்றுகின்றனர். 2
ஆயிரத்து 176 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இணைப்பு அலுவலகங்கள் 215
அமைக்கப்படவுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 369 பரீட்சார்த்திகள் பரீட்சை
எழுதுகின்றனர். பரீட்சை 2 ஆயிரத்து 196 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இணைப்பு அலுவலகங்கள் 498 அமைக்கப்படவுள்ளன – என்றார்.





