புதினங்களின் சங்கமம்

யாழில் சவர்காரத்தினுள் ஹேரோயின் கடத்திய கில்லாடி பிடிபட்டது எப்படி?

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.

பொலிசாரின் சோதனையின் போது, வெளியிடமொன்றிலிருந்து பார்சல் சேவிஸ் மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவர்க்காரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்தப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.

கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x