யாழில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் ஆயுததாரிகள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டுக்கு இன்று துவிச்சக்கர வண்டிகளில் சென்ற 5 பேரடங்கிய குழுவினர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதியும் அப்பகுதியில் இதே போன்றதொரு வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்தசம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மானிப்பாய் பொலிஸார் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.

