புதினங்களின் சங்கமம்

தமிழர் பகுதியில் முஸ்லீம் மதகுருவை தன்னுடன் படுக்க வைத்த மனைவியும் அதனை வீடியோ எடுத்த கணவனும் பிடிபட்டது எப்படி?

​புத்தளம் “தில்லயடி” பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர், “மல்வானை” பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் மெளலவி ஒருவரை ஏமாற்றி, அவரை ஆபாசமான நிலையில் வீடியோ எடுத்து, பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
​இச்சம்பவம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த தம்பதியினர் புத்தளம் ஏரிக்கு அருகில் வைத்து மெளலவியை சந்தித்து, அவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.
​பின்னர், அந்த பெண் மெளலவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, ஜூன் 6ஆம் திகதி நள்ளிரவில் அவர் அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார்.
​பாதிக்கப்பட்டவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தனது ஆடைகளைக் களைந்துள்ளார்.
அந்தத் தருணத்தில், பெண்ணின் கணவர் மற்றொரு நபருடன் திடீரென அறைக்குள் நுழைந்து மெளலவியை தாக்கியுள்ளார்.
​சந்தேக நபர்கள் மதகுருவிடமிருந்த 18,500 ரூபா பணம் மற்றும் அவரது தேசிய அடையாள அட்டையை பறித்துச் சென்றுள்ளனர்.
அதுமட்டுமன்றி, அவர் அரைகுறை ஆடையுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டல் மூலம் அவரிடமிருந்து பல தடவைகளாக மொத்தம் 185,000 ரூபா பணத்தை பறித்துள்ளனர்.
​புத்தளம் பொலிஸாரின் விசாரணையில், இந்த தம்பதியினர் பலரைத் தங்களது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களது உடமைகளைப் பறித்து, பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் இத்தகைய குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
​கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடந்த 13ஆம் திகதி  புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, மேல் விசாரணைகளுக்காக இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x