Latestபுதினங்களின் சங்கமம்

பல சிங்களப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய குருநாகல் வைத்தியரின் மனைவி பிள்ளைகளுக்கு நடப்பது என்ன?

குருநாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்றே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எனினும் 4000 பௌத்த தாய்மாரை மடலாக்கிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவர் தொடர்பான செய்திகள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இவருடைய குடும்பம் பற்றி தற்போது கவல்கள் வெளியாகி உள்ளன.

எந்தக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாத நிலையில் இவர் பற்றி வெளிவரும் செய்திகளால் இவருடைய குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவருடைய மனைவி வைத்தியர் இமாரா ஷாபி. இவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரகவியல் வைத்தியராக இருக்கின்றார்.

தனது கணவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து வேலைக்குச் செல்ல முடியாமல் உள்ளார்.

அத்துடன் இவரது பிள்ளைகளான மூவரும் பாடசாலைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 10, 13 மற்றும் 15 வயதுடையவர்கள்.

எமது வீடுகளில் இருந்து நாம் அகதிகளைப் போல் வெளியே நிற்க வேண்டியுள்ளது. ஏனெனில் எமது வீடு இனிமேல் எமக்கு பாதுகாப்பாக இல்லை என்று டொக்டர் ஷாபி ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

தனது கணவர் வெறுமனே விடுதலை செய்யப்படுவதை தான் விரும்பவில்லை. அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் விசாரணையே எனக்கு வேண்டும் என்று டாக்டர் இமாரா கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு இப்போதும் சரியாகத் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை. இது எமது பிள்ளைகளையும் பெரிதாகப் பாதிக்கிறது.எனது குடும்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. நிலைமை சாதாரணத்துக்கு திரும்பி முன்னரைப் போல இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எனது கணவர் அப்பாவி என்று வெளியில் வந்தாலும் நிலைமை முன்னரைப் போல் இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் ஊடகங்கள் எம்மை கொன்று விட்டன என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.