புதினங்களின் சங்கமம்

யாழில் நடப்பது என்ன? அவளை திருப்திப்படுத்தாத நீ ஆம்புளையா என கேட்ட மாமியார்!! ஜட்டியை கழற்றி காட்டிய பின் மனைவியை விவாகரத்துச் செய்யும் இஞ்சினியர்! ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு சாப்பிடுவாளாம்!

யாழில் உள்ள அரச அலுவகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 34 வயதான தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார் பொறியியலாளர். அவர் தனது மனைவியின் செயற்பாடு தொடர்பான சோகக்கதையை எமது ஊடகத்திற்கு அனுப்பி குமுறியுள்ளார். அவர் எமக்கு ஆங்கிலம் மற்றும் தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்த தகவலை அப்படியே இங்கு மொழி பெயர்த்து தந்துள்ளோம்.

நான் 2019ம் ஆண்டு திருமணம செய்தேன். திருமணமாகும் போத மனைவி பட்டதாரி. மனைவிக்கு 2021ம் அரச நியமனம் கிடைத்தது. தற்போது எனக்கு 5 வயது மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளார்கள். திருமணமான அன்று இரவே மனைவி தனக்கு சமையல் தெரியாது என கூறினாள். ஆரம்பத்தில் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. மனைவி தனது பெற்றோருக்கு ஒரே ஒரு மகள். பெற்றோர் அரச அதிகாரிகள். அண்மையிலேயே ஓய்வு பெற்றார்கள். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே அருகில் உள்ள ஒரு வீட்டிலும் ஹோட்டல்களிலுமே சாப்பாடு ஓடர் செய்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்துள்ளது எனக்கு தெரியவந்தது.

எனது மாமனாரே காலையில் தேனீர் தயாரித்து வழங்கி வந்துள்ளார். அவர் காலை 6 மணிக்கு தேநீர் தயாரித்து படுக்கையில் கிடக்கும் எனது மாமியாருக்கு ” அப்புச்சி… தேத்தாவைக் குடிடா” என கூறிவி்ட்டு மாமியாருக்கு அருகில் தேநீரை வைத்துவிட்டு எனது மனைவிக்கும் எனக்கும் தேநீர் கொண்டு வந்து மேசையில் வைப்பார். இவை எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.

கலியாணம் ஆகிய புதிதில் பீசா, கொத்துறொட்டி, புரியாணி என தொடர்ச்சியாக ஹோட்டல் சாப்பாடு வந்த போது இது தொடர்பாக நான் மனைவியிடம் கூறி வீட்டில் சமையலைத் தொடங்குமாறு கேட்ட போது அதற்கு மனைவி எதிர்ப்புத் தெரிவித்தாள். அவர்கள் 3 நேரமும் ஓடர் கொடுத்து வாங்கும் அயல் வீட்டுச் சாப்பாடு எனது ருசிக்கு ஒத்துவரவில்லை. இருப்பினும் பொறுமை காத்தேன். மனைவிக்கு வேலை கிடைத்த பின்னரும் இவ்வாறே தொடர்ந்தது. குழந்தைப் பேற்றின் போது வீட்டிற்கு வரவழைக்கப்பட்ட வேலைக்காரப் பெண் ஒருவர் மூலம் எனக்கு வீட்டுச் சாப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் மீண்டும் வெளியிடங்களில் இருந்து வரும் சாப்பாடே தொடர்ச்சியாக கிடைத்தது.

அத்துடன் கடைகளில் காணப்படும் தின்பண்டங்கள், விதம் விதமான ஐஸ்கிறீம் வகைகள், பெறுமதி மிக்க சொக்கலேட்டுக்கள் போன்றவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து குழந்தைகளுக்கும் கொடுக்காது சாப்பிடும் பழக்கம் மனைவியிடம் காணப்பட்டது. (அவற்றை நானே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம என கூறியிருந்தேன்.)  நாள் ஒன்றிற்கு சுமார் 2 ஆயிரம் ரூபா பணம் மனைவியின் சாப்பாட்டுக்கு மட்டும் பயன்பட்டது. அதை விட மனைவியின் அலங்காரச் செலவு ஆடைச் செலவு போன்றவற்றிக்காக மாதம் 40 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து கொண்டிருந்தாள்.

தனது சம்பளம் முழுவதையும் தனது தேவைக்காக பயன்படுத்தியதுடன் எனது உழைப்பில் இருந்து பெறப்படும் பணத்தையும் அவள் வீண் விரயமாக செலவு செய்ய முற்பட்ட வேளை நான் அதனை தடுத்து நிறுத்தினேன். எனது இரு குழந்தைகளின் தேவைகள் மற்றும் அவர்களது உணவு விடயத்தில் கூட மனைவி அக்கறைப்படாது அவர்களுக்கும் வெளிச் சாப்பாட்டை கொடுப்பதை கண்டித்தேன். இதனால் பல முறை எனக்கும் மனைவிக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

சாப்பாடு விடயம் மட்டுமல்லாது தொடர்ச்சியாக தொலைபேசியில் மூழ்கிவிடுவது, தனது பிள்ளைகளில் எந்தவித அக்கறையும் இல்லாது இருப்பது, பணத்தை தண்ணீராக செலவு செய்வது போன்ற செயற்பாடுகள் மனைவியிடம் அதிகரித்து காணப்பட்டது. எனது ஆடைகளையும் குழந்தைகளது ஆடைகளையும் நானே சலவை இயந்திரத்தின் உதவியுடன் தோய்து வந்தேன்.

மனைவி மற்றும் மாமியாரின் ஆடைகளை மாமனார் தோய்த்து வந்தார். எனது மாமனாரின் செயற்பாடு மிகவும் விசித்திரமானது. அவற்றை இங்கு குறிப்பிடுவதை தவிர்க்கின்றேன்.

14 வயதில் எனது அப்பாவையும் 19 வயதில் எனது அம்மாவையும் நான் இழந்தவன். எனக்கு 2 அக்காவும் ஒரு அண்ணாவும். அண்ணா மற்றும் ஒரு அக்கா வெளிநாட்டில். மூத்த அக்காவுடனேயே நான் திருமணமாகும் வரை வாழ்ந்து வந்தேன்.  எனது அக்காவும் அரச உத்தியோகத்தர். அத்தான் வர்த்தகர். அக்கா தனது கணவன் மற்றும் குழந்தைகளை கவனிக்கும் விதத்துடன் ஒப்பிட்ட போது எனது மனைவி செய்வது மிகவும் கேவலமான செயற்பாடாக இருந்தது. மனைவியின் தவறுகளை தயவாகக் கூறி திருத்த முற்பட்டேன். அது தோல்வியடைந்தது. இருப்பினும் காலம் செல்லச் செல்ல திருந்துவாள் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்தேன்.

தைப்பொங்கல் தினத்தில் வீட்டில் பொங்கி முழுமையான செயற்பாட்டையும் செய்தது நானும் மாமனாருமே. இரு பொம்பிளைகளும் ( மாமியும் மனைவியும்) பொங்கி முடியும் வரை நித்திரையிலிருந்து எழும்பவில்லை. கடந்த சில நாட்களு்ககு முன் எனது மூத்த மகனை ஆரம்ப பள்ளியில் விட்டு விட்டு நான் எனது தொழிற்பகுதிக்கு சென்று சிறிது நேரத்தில் அங்கிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மகன் தொடர்ச்சியாக வாந்தி எடுக்கின்றார் எனவும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்கள். அதே நிலைதான் எனக்கும் இருந்தது. இரு தடவைகள் தொழிற்பகுதியில் நான் நின்ற போது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது. உடனடியாக அங்கு சென்று அவனை நான் கூடிச் சென்று வைத்தியசாலையில் சிகிச்சை கொடுத்த போது சாப்பாட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்கள்.

மனைவி வேலையிலிருந்து வந்த போது இது தொடர்பாக நான் மனைவியிடம் கூறிய போது ” நானும் அதே சாப்பாடுதான் சாப்பிட்டேன். எனக்கு எதுவும் வரவில்லை” என கூறி விதண்டாவாதம் புரிய எனக்கு வந்த அடக்க முடியாத ஆத்திரத்தில் மனைவியை தாக்கத் தொடங்கினேன். மனைவியை அடித்த போது பாய்ந்து வந்த மாமியார் என் மீது தாக்குதல் மேற்கொண்டார். அவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டேன். ( நான் கைகளாலேயே தாக்கினேன். ஆனால் மாமியார் பிளாஸ்டிக் கதிரை மற்றும் கிடந்த பொருட்களால் எறிந்தார்)

அதன் பின்னர் எனது மாமியார், மனைவியின் வாய்களில் இருந்து நான் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது கூட கேட்டிராத வித்தியாசமான துாசண வார்த்தைகள் வெளிவந்தன. வெளியே சென்றிருந்த மாமனார் வீ்ட்டுக்கு வந்த போது மாமியாரும் மனைவியும் ஓடிச் சென்று அவரிடம் அழுது குளறினார்கள். இவ்வளவு காலமும மனைவியின் சேலை நுணியைப் பிடித்து திரிந்த மாமனாருக்கு வீரம் வந்து ”டேய் தட்டுவாணி” ( இதுவும் புதிய வார்த்தைதான்) என்ன துணிவிருந்தால் கை வைப்பாய் என கேட்டபடி என்மீது பாய்ந்து வந்தார்.படார் என கன்னத்தில் ஒரு அப்பு அப்பினேன்… அவ்வளவுதான் ஆள் அங்கிருந்து வெளியேறி பொறித்தின்னி, வடுவாறாஸ்கல் என ஏராளமான வார்த்தைகளால் என்னை திட்டத் தொடங்கினார்,….. ஆனால் அவரின் வாயிலிருந்து எந்தவித துாசணமும் வரவில்லை.

இதன் உச்சக்கட்டமாக ” பரதேசி நாயே அவளை திருப்திப்படுத்தி வக்கில்லை உனக்கு. நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா” என மாமி கேட்ட போது நான் அணிந்திருந்த சோட்சை அப்படியே மாமியின் முன் கழட்டிக் காட்டினேன்… ” அவ்வளவுதான் அடங்கிவிட்டார்….

அதன் பின்னர் நான் எனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது மனைவி பாய்ந்து வந்து பிள்ளைகளை பறிக்க முற்பட்ட போது கொட்டன் ஒன்றை கையில் எடுத்தவுடன் பின் வாங்கினாள். அப்படியே இரு குழந்தைகளையும் நான் எனது அக்காவின் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டதுடன் அக்காவிடம் நடந்த விடயத்தை கூறினேன்.

அக்கா வீட்டில் நான் பிள்ளைகளுடன் இருப்பதை அறிந்த அவர்கள் அக்காவுக்கு கோல் செய்து பொலிசாரிடம் முறையிடப் போவதாக கூறியதால் அக்கா அச்சமடைந்து கெஞ்சி மன்றாடி எனது இரு பிள்ளைகளையும் அங்கு கொண்டு சென்று விட்டுள்ளார். தற்போது நான் பிரிந்து வாழ்கின்றேன்… விவாகரத்து விண்ணப்பித்துள்ளேன். எனது இரு பிள்ளைகளும் எனக்கு தேவை. தயவு செய்து இதனை செய்தியாக வெளியிடுங்கள். அவளுக்கு ஆதரவாக வாதாடவுள்ள வக்கில்கள் யாராவது பார்த்து சம்பவம் என்ன என்பதை அறிந்து நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகின்றேன்… என எமக்கு அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தனது திருமண புகைப்படங்கள் மற்றும் அத்தாட்சிகள் தொடங்கி விவாகரத்து விண்ணப்பம் வரை சகல ஆவணங்களையும் எமக்கு அனுப்பியுள்ளதுடன் அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனவும் கேட்டிருந்தார். ஆகவே நாம் அவற்றை இங்கு பிரசுரிக்கவில்லை.

தமது பெண் குழந்தைகளை எந்வித வேலை வெட்டியும் செய்விக்காது செல்லமாக வளர்க்கம் பெற்றோருக்கு இது சமர்ப்பணம்…..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x