யாழில் வீட்டை விற்று கிடைத்த 4 கோடி ரூபாவை இழந்த விரக்தி!! இளம் பொறியியலாளர் தற்கொலை முயற்சி!!
யாழில் 29 வயதான இளம் பொறியியலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று காயங்களுடன் காப்பாற்றப்பட்டள்ளார். புலம்பெயர் நாட்டில் உள்ள தனது நண்பனுடன் சேர்ந்து தொடர்மாடிக் குடியிருப்புக்கான பாரிய கட்டட நிர்மாணம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். அதன் போது காணிக் கொள்வனவுக்காக தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்று பணத்தை பெற்று குறித்த காணியை நண்பனின் பணத்துடன் சேர்த்து கொள்வனவு செய்ததாகவும் பல கோடி ரூபா மதிப்பான அந்தக் காணியை வரி விலக்குக்காக நிறுவனம் ஒன்றின் பெயரிலேயே பதிந்து தொடங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையில் பொறியியலாளரின் நண்பன் நிறுவனப் பதிவினை தனது பெயருக்கு மாற்றியதாகவும் நம்பிககை காரணமாக பொறியியலாளரால் வைக்கப்பட்ட ஒரு கையெழுத்து குறித்த நிறுவனத்தை நண்பன் தனது பெயரில் மாற்றியதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டு விட்ட விரக்தியில் பொறியியலாளர் தனது வீட்டு வளவில் துாக்கில் தொங்க முற்பட்டதை அவதானித்து அயலவர்கள் அங்கு செல்வதற்கிடையில் பொறியியலாளர் துாக்கில் கொண்டிருந்த போது அயலவர்களால் மீட்கப்பட்டு கழுத்துப் பகுதியில் கண்டல் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் கொக்குவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. பொறியியலாளர் தற்போது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளார்.
பொறியியலாளரை ஏமாற்றிய குறித்த நண்பன் யார், எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பவற்றை புகைப்படங்கள் மற்றும் முழுமைான விபரங்களுடன் ஓரிரு நாட்களில் பதிவேற்றுவோம்.

