யாழில் நுட்பமான கள்ளன்!! அப்பாவியாக நடித்து பலரிடம் மோசடி செய்த அஞ்சுதன்!!
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியியைச் சேர்ந்த அஞ்சுதன் என்பவன் யாழில் தனது சகோதரியின் குழந்தைக்கு அவசர சிகிச்சைக்கு பணம் தேவை எனவும் வேறு பல பரிதாபகரமான காரணங்களைக் காட்டியும் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாக்களை வாங்கி ஏமாற்றி வருகின்றான். வாங்கிய பணத்திற்கு வங்கியில் பணம் இல்லாத கணக்குகளில் உள்ள காசோலைகளை கொடுத்து ஏமாற்றியும், வாடகைக்கு வாகனங்களை வாங்கி அவற்றிற்கான பணத்தை கொடுக்காது ஏமாற்றியும் வருகின்றான். பல பெண்களுடன் தொடர்பில் உள்ள இவனது துர்நடத்தை காரணமாக இவனது மனைவி இவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரியவருகின்றது. வாகனம் ஒன்றை மது போதையில் செலுத்திச் சென்று விபத்துக்கு உள்ளாகி ஊண்று கோலுடன் திரியும் இவனைப் பார்க்கும் போது பரிதாபகரமான தோற்றத்தில் இருப்பதால் பலரும் இவனுக்கு இரங்கி பண உதவி செய்தால் அவர்களை அவன் படு மோசமாக ஏமாற்றியுள்ளதாகத் தொியவருகின்றது.
இவனது மோசடிச் செயல் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் இவனை பொலிசார் அழைக்கும் போது இவன் பொலிஸ் நிலையம் செல்வதில்லை எனவும் இதன் காரணமாக ஒரு தடவை வழயில் சென்ற இவனை கண்டு பணம் கொடுத்த ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த போது அங்கிருந்து தப்பிச் சென்று மனித உரிமை ஆணைக்குழுவில் தன்னை கடத்துகின்றார்கள் என முறைப்பாடு கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆகவே இவன் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொதுமகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.





