லட்டுக்குள் எலி புழுக்கை! யாழ் பல்கலை மாணவியின் ஜங்கிக்குள் விரல் விட்டு கன்னிப் பரிசோதனை!பொதுச்சுகாதார பரிசோதகர்களே உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையா? நடந்தது என்ன?
தமிழர் பகுதிகளில் உள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்களே…..
கிலோ கறுவா (இலவங்கப்பட்டை) 7 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. அந்தக் கறுவாப்பட்டைச் சுருள்களில் உட்சுருள்களு்ககுள் இருப்பது சாதாரண மரப்பட்டைகளே. ஒரு கிலோ கறுவாவில் கிட்டத்தட்ட 400 கிராம் சாதாரண மரப்பட்டைகள் கலந்த நிலையிலேயே பல்பொருள் அங்காடிகளில் விலைப்படுகின்றது. இது பல்பொருள் அங்காடிகளால் செய்யப்படும் கலப்படம் அல்ல. தென்பகுதியிலிருந்தே கலப்படமாக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை நீங்கள் எப்போதாவது பரிசோதித்துள்ளீர்களா?
தென்பகுதி நிறுவனங்களின் லேபிள்களுடன் பல்வேறு பல்பொருள் அங்காடிகளில் 20வீத, 40 வீத விலைக்கழிவுகளில் விற்கப்படும் சூரியகாந்தி எண்ணை தொடர்பாக நீங்கள் எப்போதாவது கவனம் செலுத்தி அவற்றை பரிசோதித்துள்ளீகளா?
தென்பகுதி நிறுவனங்களின் லேபிள்களுடன் விற்கப்படும் தொதல்,மஸ்கட், எள்ளு இனிப்பு போன்ற தின்பண்டங்களை நீங்கள் எப்போதாவது பரிசோதித்துள்ளீர்களா?
தென்பகுதி உணவு, பாணங்கள் தயாரிக்கும் பாரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பாரிய கலப்பட மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் தொடர்பாக தமிழர் பகுதியில் செயற்படும் பொதுச்சுகாதார பரிசோதகர்களான நீங்கள் இதுவரை எந்த நடவடிக்கை எடுத்தீர்கள்?
யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் விற்கப்படும் மீன்கள் பழுதடைந்தவையாகவும் பழுதடையாமல் இருப்பதற்காக பிணத்திற்கு பூசப்படும் இரசாயணம் பூசப்பட்டும் விற்கப்படுகின்றது. இவற்றுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?
பிரபல ஹோட்டல்களில் மட்டன் கறி என கூறி வேறு இறைச்சிகள் கலந்து ஆட்டுக் கொழுப்பை அதனுள் இட்டு வாடிக்கையாளர்களு்ககு கொடுப்பவர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
பொதுமக்களுக்கான உணவுப் பண்டங்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை அவதானித்து பாவனையாளர்களுக்கு துாய்மையான பண்டங்களை வழங்குவதற்காக உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையான முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆனாலும், உணவுப் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்கின்றோம் என்ற போர்வையில், ”இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் துாக்கித் துாக்கி அடிப்பது போல்” அப்பாவிகள், மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு, உங்கது சட்ட அதிகாரங்களைப் பிரயோகித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை தகர்க்கும் செயற்பாடுகளும், உணவகங்களுக்கிடையே, உணவு தயாரிப்பாளர்களுக்கு இடையே நடைபெறும் போட்டித் தன்மையை வைத்து அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எதிர்த்தரப்பை தாக்குவதும் தற்போது பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் திரியும் ஒரு சில செம்மறி நாய்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர் பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டங்ளை மிக நுணுக்கமாக கடைப்பிடிப்பதால் உணவுத் தயாரிப்புகளில் ஈடுபடுபவர்களில் அப்பாவிகள் மட்டுமே கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மிகக் கேவலமான மனிதாபிமானம் அற்ற சம்பவம் ஒன்றை இங்கு தருகின்றோம்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவி பல்கலைக்கழக கற்கை நெறிகள் தொடங்குவதற்கு முன் கேக் ஐசிங், தையல், மற்றும் திருமண மண்டபங்களுக்கு கொடுப்பதற்கான பலகாரங்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை கற்று அவற்றை தனது தாய், தந்தை, சகோதரிகளின் உதவியுடன் தயாரித்து வந்துள்ளார். குறித்த மாணவியின் தந்தையார் அரச அலுவலகம் ஒன்றின் அலுவலகப் பணியாளர். 3 சகோதரிகள். தாயார் தொற்றா நோயாளி.
தமிழர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் சிலவற்றிற்கு குறித்த மாணவி நேரில் சென்று கதைத்து பூந்தி லட்டு மற்றும் றிச்கேக் ஓடர் பெற்று அவற்றை தனது சகோதரிகள் மற்றும் தாய், தந்தையுடன் சேர்ந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். அதனால் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க வருமானம் சில மாதங்கள் வந்துள்ளது.
இவ்வாறான நிலையில், அரச உயரதிகாரி ஒருவரின் சகோதரியின் மகளின் திருமணம் பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. அங்கு பரிமாறப்பட்ட பூந்திலட்டில் எலிப்புழுக்கை ஒன்று காணப்பட்டுள்ளது. அரச அதிகாரிதானே.. அதனால் உடனடியாக மண்டபத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அங்கு குவிந்தார்கள். மண்டப ஓனரும் பிரபலமான வர்த்தகர். அவர் தன்னில் குறை இல்லாதவாறு பார்த்துக் கொண்டு பூந்தி லட்டு தயாரித்து கொடுத்ததாக கூறி குறித்த பல்கலைக்கழக மாணவி மீது விரலை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனாலும் அன்றைய அந்த கலியாணத்திற்கு குறித்த மாணவி லட்டு தயாரித்து கொடுக்கவில்லை. மாணவியின் லட்டு விலை கூடுதல் என்று கூறி இன்னொரு இடத்திலேயே லட்டு வாங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
மாணவியின் வீடு சுகாதாரப் பரிசோதகர்களால் சோதனையிடப்பட்டது.மாணவிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட பயிற்சின் அடிப்படையில் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டதால் அங்கு சுகாதரம் பேணப்பட்டிருந்தது. இருப்பினும் கடலை மாவு சேகரித்து வைக்கப்பட்டிருந்த வாளியின் வெளிப்பகுதியில் ஒட்டப்பட்டடிருந்த அந்த வாளி நன்கொடையாக கொடுத்த நிறுவனத்தின் ஸ்ரிக்கர் அழுக்கடைந்து காணப்பட்டதை சுட்டிக் காட்டி வாளி அசுத்தமாக இருந்தது என்றும் கயூ, பிளம்ஸ் போன்றவற்றை பத்திரிகை தாளினால் சுற்றி வைத்திருந்தது, பூந்தி லட்டை பத்திரிகை தாளில் அடுக்கி வைத்திருந்தமை ( மேல் உறை சுற்றுவதற்காக வைத்திருந்த போது) கேசரிப்பவுடர் சரியான முறையில் பாதுகாப்பாக முடி வைக்காது இருந்தமை, குறித்த பலகாரங்கள் தயாரிப்பதற்காக வீட்டுடன் சேர்த்து போடப்பட்டிருந்த தகரக்கொட்டகை காற்று அடித்தால் துாசு படருமாறு இருந்தமை போன்ற 8 குற்றச்சாட்டுக்கள் அந்த மாணவியின் மேல் சுமத்தப்பட்டது.
”சேர் இனிமேல் இவ்வாறு நீங்கள் சொல்லும் அனைத்து குறைபாடுகளையும் திருத்தி செய்வோம். தயவு செய்து மன்னியுங்கள்” என குடும்பத்தினர் கெஞ்சக் கெஞ்ச 20 வயது மாணவி மீது வழககு பதியப்பட்டது. ”நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள். தண்டப்பணம் அறவிட்டுவிட்டு விட்டுவிடுவார்கள். இல்லாவிட்டால் லோயர்மாருக்கு ஒவ்வொரு தவணையும் 10 ஆயிரம் கட்டடிக் கட்டிக் அலைய நேரிடும்” என்று அட்வைசும் அவர்கள் கூறினார்களாம்.
வழக்குக்காக ஒரு வெள்ளிக் கிழமை நீதிமன்றத்திற்கு மாணவியும் தாயாரும் தந்தையும் போய் உள்ளார்கள். வழக்கு மதியத்திற்கு பின்னரே அழைக்கப்பட்டுள்ளது. நீர் குற்றவாளியா? என மாணவியிடம் நீதிமன்றம் கேட்டது.மாணவி ஆம் என்று கூறியவுடன் 8 குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து தீர்க்கப்பட்ட தண்டப்பணம் மாணவியின் பெற்றோர் கொண்டு சென்ற பணத்தின் 6 மடங்காகும்.
குறித்த வழக்கு அழைக்கப்படும் போது தாயும் தந்தையும் தொலைவில் இருந்தே அவதானிக்க முடிந்துள்ளது. அருகில் செல்ல முடியாது. தனது மகள் தொடர்பாக நீதிமன்ற முதலியார் என்ன கூறினார் என்று அவர்களுக்கு விளங்கவி்ல்லை. மகள் குற்றவாளிக் கூட்டிலிருந்து கீழே இறங்கி வருவதைப் துாரத்தில் இருந்து பெற்றோர் பார்த்துக் கொண்டு இருக்கும் போது மகளை அங்கு நின்ற பெண் பொலிஸ் இழுத்துச் சென்று நீதிமன்றில் இருந்த சிறைக்கூண்டுக்குள் அடைத்தார்.
பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கோ மகளுக்கோ நீதிமன்ற நடைமுறை புதிது. என்ன நடக்கின்றது என அவர்களுக்கு விளங்கவில்லை. தாங்கள் இருந்த இடத்தை விட்டு மகளை நோக்கிச் செல்ல முற்பட்ட போது பொலிசாரால் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி அனுப்பட்டனர். மகள் சிறைக் கூண்டுக்குள் இருந்து அழத் தொடங்கியுள்ளார்.
உடனடியாக நீதிமன்ற வழக்கு நடக்கு இடத்தை விட்டு வெளியே வந்து தனது மகளுக்கு நடந்த சம்பவத்தை அங்கு நின்ற சட்டத்தரணியிடம் பதற்றத்துடன் கூறியுள்ளனர். அச் சட்டத்தரணியோ தண்டப்பணத்தை செலுததிவிட்டு அவளை கூட்டிச் செல்லலாம் என கூறி அதனைப் பெரிதாக பொருட்படுத்தாது சென்று விட்டார். அதன் பின்னர் அவர்கள் வெளியே நின்ற பலரிம் விசாரித்த போது அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார்கள். தண்டப்பணம் எவ்வளவு என தெரியாது அவர்கள் தவித்துள்ளார்கள். நீதிமன்ற பதிவாளரிடம் விசாரித்த போது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் நேரத்திலேயே தண்டம் கட்டுமாறு உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்து தண்டப்பணத்தை கேட்ட இருவரும் அதிர்ந்தனர். தாம் கொண்டு வந்த பணத்திலும் பார்க்க 6 மடங்கு தண்டப்பணத்தை கட்டுவதற்காக மாலை 3.30 மணியளவில் அங்கிருந்து 8 கிலோ மீற்றர் துாரத்திற்கும் அதிகமான இடம் ஒன்றுக்கு அவர்கள் சென்று தாய் தனது காதுத் தோட்டை கழற்றி அடகு வைத்து பணம் கொண்டு வந்த போது மாலை 5 மணியாகிவிட்டது. நீதிமன்றப் பதிவாளர் உட்பட அனைவரும் சென்றுவிட்டார்கள். தாய் தந்தையின் கண் முன்னே மகள் கதறக் கதற சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றபட்டு சிறைக்கு கொண்டு செல்லபட்டாள்.
மாணவிக்கு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூரம்
சிறைச்சாலைக்குள் உடற்பரிசோதனையின் பின் சிறைக்குள் அடைக்கப்படடாள் மாணவி. குறித்த சிறையின் அறையில் ஏற்கனவே சில போதைப்பொருள் மற்றும் கொடூர குற்றங்கள் செய்த பெண் காவாலிகள் விளக்கமறியலில் அடைக்கப்பட்டிருந்தார்கள். குறித்த மாணவி சிறைக்கு செல்லும் வரை அழுதவண்ணமே இருந்துள்ளார். அறைக்குள் விடப்பட்டும் அழுது கொண்டிருந்துள்ளார். அங்கு இருந்த காவாலிப் பெண்கள் கேள்வி கேட்ட போது மாணவி பதிலளிக்காது அழுது கொண்டிருந்ததால் கன்னத்தை பொத்தி காவாலி ஒருத்தி அடித்துள்ளாள்.
பிணைப்பணம் கட்டாததால் உள்ளே கொண்டு வந்து விடப்பட்டதாக அதன் பின்னர் மாணவி கூறிய போது யாரையாவது காதலிக்கின்றாயா? யாருடனாவது படுத்தெழும்பினாயா? என கேட்டுக் கொண்டே ஒருத்தி மாணவியின் உள் ஆடைக்குள் கை விட்டுள்ளாள். அத்துடன் அந்த மாணவி இன்னும் கன்னி கழியாமல் இருப்பதாக ஏனையவர்களுக்கு கூறி சிரித்துள்ளார்கள். இரவிரவாக மாணவி குறித்த காவாலி பெண்களால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளாள். மாணவி சிறை பெண் காவாலர்களை அழைத்தும் அவர்கள் அங்கு வரவில்லை என தெரியவருகின்றது. இது தொடர்பாக யாரிடமாவது சொன்னால் இங்கேயே கொலை செய்வோம் என அச்சுறுத்தியதுடன் மாணவியை வாய் மூலமான புணர்ச்சிக்கு தங்களுடன் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக தெரியவருகின்றது.
இரு நாட்கள் சிறைக்குள் நரக வேதனையடைந்த குறி்தத மாணவி திங்கட் கிழமை தண்டப்பணம் கட்டிய பின் அன்று மாலையே விடுவிக்கபட்டுள்ளாள். திக்பிரமை பிடித்தது போல் சிறையிலிருந்து வெளி வந்த மாணவியை விடுப்புப் பார்க்கவும் விண்ணானம் கேட்கவும் அயலவர்கள் வந்ததால் கடும் விரக்தியுற்ற மாணவி அடுத்த நாள் காலை கிணற்றுக்குள் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது.
ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை, சுயமரியாதையை, வாழ்வாதரச் செயற்பாட்டை நிர்மூலமாக்கிய குறித்த பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் மனைவி, பிள்ளைகளுடன் நிம்மதியாக இருப்பார்கள். ஆனாலும் காலச்சக்கரம் சுழரும்… அவர்களின் உறவுகளுக்கும் இவ்வாறான நிலை நிச்சயம் ஏற்படும்….

