யாழ்ப்பாணத்தில் பிடிபட்டது சருகு புலி!! தொடர்ச்சியாக கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது! வீடியோ
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
படத்தில் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த விலங்கு கொடிப் புலி அல்லது ஆனைப் புலி என்று அழைக்கப்படும் மீன்பிடி பூனை (Fishing Cat) ஆகும். (இதன் அறிவியல் பெயர்: Prionailurus viverrinus).
சிங்கள மொழியில் இதனை ‘ஹந்துன் திவ்யா’ (Handun Diviya – හඳුන් දිවියා) என்று அழைப்பார்கள்.
இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கிராம மக்கள் பிடித்ததுள்ளனர்
அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக கூறி செல்லமுற்பட்ட வேளை ஊரவர்கள் குழப்பம் அடைந்ததை அடுத்து, மற்றுமொரு வனஜீவராசிகள் திணைக்கள வாகனத்தை வரவழைத்து பாதுகாப்பாக கொண்டுசென்றுள்ளனர்.



