மனைவி மீது சிறுநீர் கழித்து சித்திரவதை செய்யும் கணவன் ( Video)
உத்திரபிரதேச மாநிலத்தில் உயர் பொறுப்பிலிருக்கும் அரசாங்க அதிகாரி ஒருவர் மனைவியை கொடுமைப்படுத்தியதாக வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபுராம் நிஷாத். இவர் 14 ஆண்டுகளுக்கு முன் நீத்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இவர் அந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்க நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த பதவியானது, அந்த மாநிலத்தில் அமைச்சர் பதவிக்கு நிகரானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், நீத்து அழுதுகொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், அவருடைய கணவர் அவரை மிகவும் கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.
மேலும் அவர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் பின்னர் துப்பாக்கியை காட்டி நீத்து மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால், பயந்துபோன நீத்து பொலிசில் புகார் அளித்துள்ளார். ஆனால், பாபுராம் தனது செல்வாகினால் உள்ளூர் காவல்துறையினர் புகாரை எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் விரக்தி அடைந்த நீத்து உத்திர பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்திடமும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனக்கு நேர்ந்த இன்னல்களை விவரித்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய மனைவி தன்னை மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் என்று பாபுராம் நீத்து மீது புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

