புதினங்களின் சங்கமம்

இளவாலை பெரியவிளான் சந்தியில் காவாலிகளின் மோதலால் பரபரப்பு!

இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து வெறும் 200 மீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக மோதிக்கொண்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் வீதியால் பயணித்தவர்களும் அயலவர்களும் பெரும் அச்சமடைந்தனர். விளானைச் சேர்ந்த காவாலிகளும் பண்டத்தரிப்பு பற்றிமா கோயிலடியை சேர்ந்த காவாலிகளுமே கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சந்தியினூடான போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டதுடன் அச்சத்தினால் பலர் மாற்றுப்பாதையால் சென்றதனையும் அவதானிக்கமுடிந்தது. இப்பகுதிகளில் அண்மைக்காலமாக சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.