புதினங்களின் சங்கமம்

டிக்டொக் செய்து வீடியோ வெளியிட்ட பெண் அரசு அதிகாரி..! என்ன நடந்தது தெரியுமா ??

சேலம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் டிக்டொக் செய்து வீடியோ வெளியிட்டதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அடுத்துள்ள சிக்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலராக ராஜேஸ்வரி என்ற பெண் பணியாற்றி வந்தார். பணி நேரத்தில் இவர் அவ்வப்போது டிக்டொக் வீடியோக்களை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இவருடைய டிக்டாக் வீடியோக்கள் மிகவும் வைரலாகின. குறித்த வீடியோக்கள் உயரதிகாரிகளின் பார்வைக்கு சென்ற நிலையில், வீடியோவை பரிசோதித்த உயரதிகாரிகள் ராஜேஸ்வரியை கண்டித்து புளியம்பட்டி ஊராட்சிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டனர்.