புதினங்களின் சங்கமம்

16 வயது மாணவியை ஒரு மாதமாக வல்லுறவு கொண்ட கணக்கு வாத்தி ஜெகதீஸ்வரனுக்கு 12 வருட கடூழிய சிறை!!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் விராசூரிய உத்தரவிட்டுள்ளார்.

நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்பன் தோட்டத்தில் வசிக்கும் ராஜரத்தினம் ஜெகதீஸ்வரன் என்பவருக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010.01.01 தொடக்கம் 2010.01.31 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சந்தேகநபருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், அபராதம் செலுத்தாவிட்டால், மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இழப்பீடு வழங்க தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.