Home புதினங்களின் சங்கமம் குடிகாரக் கணவனை அச்சுறுத்த மனைவி செய்த விபரீதம்!! யாழில் பரிதாபகரமாகப் பலி!!

குடிகாரக் கணவனை அச்சுறுத்த மனைவி செய்த விபரீதம்!! யாழில் பரிதாபகரமாகப் பலி!!

குடும்பத் தகராறு காரணமாக கணவனை மிரட்டுவதற்காக மண்ணெண்ணை ஊற்றி
தீப்பெட்டியைப் பற்றவைத்த மனைவி, தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர்
உயிரிழந்தார். 4 பிள்ளைகளின் தாயாரான அவருக்கு 6 மாதங்கள் நிரம்பிய
கைக்குழந்தையும் உண்டு.

அவரை தீயிலிருந்து காப்பாற்றுவதற்காக கட்டியணைத்து எரிகாயங்களுக்கு
உள்ளான கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவத்தில் மன்னார் சிலாவத்துறை – முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த சுகந்தி சூசை குறூஸ் (வயது – 32) என்ற தாயாரே உயிரிழந்தார்.

“மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தில் மனைவி கூலி வேலைக்கு சென்றே
பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார். ஆனால் கணவன் தினந்தோறும் குடித்துவிட்டு
வந்து மனைவியினை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன்
மனையினை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன் போது குடும்பப் பெண்
மண்ணெண்ணையினை தனது உடலில் ஊற்றிவிட்டு “குடிப்பியா குடிப்பியா” என்று
மிரட்டியுள்ளார். அதன்போது அவர் தீப்பெட்டியையும் பற்றவைத்துள்ளார்.
துரதிஷ்டவசமாக தீக்குச்சியிலிருந்த தீ குடும்பப்பெண்ணின் உடலில் பற்றிக்கொண்டது.

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (28.09.2019)
Next articleயாழில் பிரதேசபை பெண் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!! எதற்காக? (Photos)